10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்
35) மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர். சிலர் மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே வீடு சென்றேன்.
- இப்பத்தியைப் படித்துத் தொகை நிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.
- இப்பத்தியைப் படித்துத் தொகை நிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.
இப்பத்தியில் உள்ள தொகை நிலைத் தொடர்கள்:
- மார்கழித் திங்கள் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை (மார்கழி ஆகிய திங்கள்)
- நடைபயிற்சி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (நடையால் பெறும் பயிற்சி)
- மிதிவண்டி - வினைத்தொகை (மிதிக்கும் வண்டி)
- சாலை ஓரம் - ஆறாம் வேற்றுமைத்தொகை (சாலையின் ஓரம்)
- செங்காந்தள் - பண்புத்தொகை (செம்மையாகிய காந்தள்)
- வீடு சென்றேன் - நான்காம் வேற்றுமைத்தொகை (வீட்டிற்குச் சென்றேன்)