10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்
33) மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்பு செய்தது ஏன்? விளக்கம் தருக.
மன்னன் பாண்டியன், புலவர் இடைக்காடனாரின் பாடலைப் பொருட்படுத்தாமல் அவமதித்தான். தன் அவமதிப்பைப் பொறுக்காத இடைக்காடனார், இறைவனிடம் முறையிட்டார். புலவரின் துயரைப் போக்க எண்ணிய இறைவன், கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி வைகையாற்றின் தென்கரையில் கோயில் கொண்டார். தன் தவறை உணர்ந்த மன்னன், இறைவனிடமும் புலவரிடமும் மன்னிப்புக்கோரி, புலவருக்குச் சிறப்பு செய்து அவரை மீண்டும் தன் அவைக்கு அழைத்து வந்தான்.