10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்
37) எடுத்துக்காட்டு உவமையணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
அணி விளக்கம்: உவமை ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும் வந்து, உவம உருபு (போல, புரைய, அன்ன) மறைந்து வந்தால் அது எடுத்துக்காட்டு உவமையணி எனப்படும்.
எடுத்துக்காட்டு:
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
பொருத்தம்: இக்குறளில் 'தொட்டனைத் தூறும் மணற்கேணி' என்பது உவமை. 'மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு' என்பது உவமேயம். இடையில் 'அதுபோல' என்ற உவம உருபு மறைந்து வந்துள்ளதால் இது எடுத்துக்காட்டு உவமையணி ஆயிற்று.