OMTEX AD 2

மறைந்துபோன சித்ராவின் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.! அஜித் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் புகைப்படம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் குடும்பப் பெண்ணாகவும், பொறுப்பான மருமகளாகவும் நடித்து ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் விஜே சித்ரா.

இவர் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர்.  நேற்று முன்தினம் இவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவரின் மரணம் மக்களை பெரிதும் பாதித்துள்ளது ஏனென்றால் இவர் சீரியலில் நடிக்கும் கதாபாத்திரம் அந்த அளவு மக்கள் மனதில் பதிந்துள்ளது. சித்ராவின் இந்த மரணத்திற்குப் பின்னால் ஏதோ மர்மம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

போஸ்ட்மார்ட்டம் தகவல்படி சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்கள் ஆனால் சித்ராவின் தாயார் கண்ணீருடன் செய்தியாளர்களை சந்தித்தபோது என் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என கூறியுள்ளார். 

இந்த நிலையில் vj சித்ரா அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அஜித்தின் புகைப்படம் பதித்த கட்டவுட் மீது கை போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார். இதை பார்த்த அஜித் ரசிகர்கள் தங்களுடைய சோகத்தை வெளிப்படுத்த வருகிறார்கள்.

அஜித் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் புகைப்படம்.

OMTEX CLASSES AD