தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரம்யா பாண்டியன். ஆனால் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. ஆதலால் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தினார்.
திடீரென அந்த புகைப்படங்கள் செம வைரலாகி ரசிகர்கள் மத்தியில் ரம்யா பாண்டியனுக்கு செம வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளார்.
பெரிய அளவு பட வாய்ப்பு இல்லாததால் வெப் சீரிஸ் பக்கம் தலை காட்டியுள்ளார் ரம்யா பாண்டியன்.
அதில் செம்பருத்தி கதாநாயகன் கார்த்தி நடித்துள்ள முகிலன் என்ற வெப்சீரிஸில் அவருடன் மிக நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார்.