Advertisement

கம்பீரமான பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? வெளியான சீக்ரெட் தகவல்!

பிக்பாஸ் குரலைக்கேட்டு ரசிக்கவே ஒரு பெரும் ரசிகர் பட்டாளம் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து ரசித்து வருகிறது. கன்ஃபெஷன் ரூமுக்கு வாங்க, நீங்க போகலாம்.. என்ன காரணம்.. என அந்த கம்பீர குரல் ஒலிப்பது ஹவுஸ்மேட்ஸ்களை மட்டுமின்றி ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

information-leaked-about-who-owns-the-majestic-voice-of-big-boss-tamil-season-4

தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ்களை அவ்வப்போது கலாய்ப்பது, பாராட்டுவது என ரசிகர்களை கவர்ந்து வருகிறது பிக்பாஸின் குரல். குரலை மட்டுமே ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் அந்த குரலுக்கான முகம் இதுவரை வெளிப்படவில்லை. இருந்த போதும் பிக்பாஸின் அந்த காந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பதை காண ரசிகர்கள் பெரும் ஆர்வமாக உள்ளனர். 

information-leaked-about-who-owns-the-majestic-voice-of-big-boss-tamil-season-4

தனது கம்பீர குரலால் ஹவுஸ்மேட்ஸ்களை மிரட்டும் அவரது பெயர் சாஷோ எனும் சச்சிதானந்தத்தை கமல் உட்பட செட்டில் உள்ள அனைவருமே பிக்பாஸ் என்று தான் அழைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் அசத்துவாரம். பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் அத்தனை நாட்களும் பிக்பாஸ் வீட்டின் செட்டில்தான் இருப்பாராம் சாஷோ.