தேர்தல் தேதி மார்ச் 10ம் தேதிக்கு முன் அறிவிக்கப்படும் என்பதால் அதற்குள் அரசியல் கட்சிகளும் கூட்டணி பற்றி பேசி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சமூக வலைத்தளங்களில் வெளியான நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் வதந்தி என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த போலியான அட்டவணை தேதிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதனை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி காவல் துறையை அணுகும் படியும் டெல்லி தலைமை தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.