10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்
முன்னுரை:
பழந்தமிழர் வாழ்வில் பண்பாட்டுக் கூறுகள் பல போற்றப்பட்டன. அவற்றுள் தலையாயது ‘விருந்தோம்பல்’ ஆகும். தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சங்ககாலத் தமிழர்கள், விருந்தினர்களை இறைவனுக்கு நிகராகப் போற்றினர். ‘விருந்து’ என்பதற்குப் ‘புதியவர்’ என்று பொருள். முன்பின் அறியாத புதியவர்களுக்கும் உணவு அளித்துப் போற்றும் உயரிய பண்பினைச் சங்க இலக்கியங்கள் பல சான்றுகளுடன் பறைசாற்றுகின்றன.
இல்லறத்தின் தலையாய கடமை:
விருந்தினரைப் போற்றுதல் இல்வாழ்வானின் தலையாய கடமையாகக் கருதப்பட்டது என்பதைத் திருவள்ளுவர்,
“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிஎன்ற குறட்பாவின் மூலம் விளக்குகிறார். பொருள் சேர்த்து, இல்லறம் நடத்துவதன் முக்கியப் பயனே விருந்தினரைப் போற்றுவதுதான் என்கிறார்.
வேளாண்மை செய்தற் பொருட்டு.”
முகமலர்ச்சியுடன் உபசரித்தல்:
விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் என்பதை,
“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துஎன்ற குறள் உணர்த்துகிறது. அனிச்ச மலர் முகர்ந்தவுடன் வாடிவிடும்; அதுபோல, விருந்தினர் நம் முகம் மாறினாலே வாடிவிடுவர் என்று விருந்தோம்பலின் நுட்பத்தை வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
நோக்கக் குழையும் விருந்து.”
இன்மையிலும் விருந்தோம்பல்:
வறுமையிலும் செம்மையாக விருந்தளித்த நிகழ்வுகளைப் புறநானூறு படம்பிடித்துக் காட்டுகிறது.
- தன்னிடம் உணவளிக்க தானியம் இல்லாததால், ஒரு தலைவன் தன் பழைய வாளைப் பணையம் வைத்து விருந்தளித்தான்.
- இரவில் வந்த விருந்தினருக்கு உணவளிக்க வழி தெரியாத தலைவி, விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றி சமைத்துப் படைத்தாள்.
- இளையான்குடி மாற நாயனார், விதைத்த நெல்லை மீண்டும் அள்ளி வந்து விருந்தளித்தார்.
இச்சான்றுகள், தமிழர்கள் தம் உயிரை விட விருந்தோம்பலை மேன்மையாகக் கருதியதை உணர்த்துகின்றன.
அல்லிலும் விருந்து:
காலம் பாராமல், நள்ளிரவில் வந்தாலும் விருந்தினரை உபசரிக்கும் வழக்கம் இருந்தது. இதனை ‘அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்’ என நற்றிணை குறிப்பிடுகிறது.
முடிவுரை:
இவ்வாறு சங்ககாலத் தமிழர்கள், விருந்தோம்பலை ஓர் அறமாக, தம் வாழ்வின் கடமையாகக் கருதிப் போற்றினர். அவர்களின் ஈகை குணமும், இன்முகப் பண்பும், இன்மையிலும் விருந்தளித்த மாண்பும் இன்றைய தலைமுறைக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கின்றன.