கீர்த்தி சுரேஷ் தூங்கும் போது பிரபல ஹீரோவும், இயக்குனரும் எடுத்துக்கொண்ட செல்பி சோஷியல் மீடியாவில் வைரலாகி உள்ளது.
கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக ‘ரங் தே’ திரைப்படத்தில் அனு என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனியாக அமர்ந்து ஓய்வெடுத்த கீர்த்தி சுரேஷ் அப்படியே குட்டி தூக்கம் போட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் கண்ணில் துணியை போட்டபடி நடிகர் நிதின் மற்றும் இயக்குனர் வெங்கி அட்லுரி இருவரும் அவர் அருகே நின்று செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ‘ரங் தே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருவதாக தெரிகிறது.