Advertisement

பிளஸ் 2 முடித்த மாணவர்களே... மதிப்பெண் குறைவாக இருக்கிறது என, கவலை வேண்டாம். வெறும் தேர்ச்சி பெற்றாலே, ஏராளமான படிப்புகள் உள்ளன


பிளஸ் 2 முடித்த மாணவர்களே... மதிப்பெண் குறைவாக இருக்கிறது எனகவலை வேண்டாம்வெறும் தேர்ச்சி பெற்றாலேஏராளமான படிப்புகள் உள்ளன. 'பெயில்ஆனாலும் பிரச்னையே இல்லைஜூனில் நடக்கும் சிறப்பு தேர்வில் பங்கேற்றுஎளிதாக தேர்ச்சி பெறலாம்வெறும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என நினைக்கவேண்டாம்ஏராளமான படிப்புகள் உள்ளனசுய தொழிலும் செய்யலாம்எனவேகுறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களையோ, 'பெயில்ஆன மாணவர்களையோ பெற்றோர் கடிந்து கொள்ளாமல்அவர்கள் மனதைத் தேற்றிஎதிர்காலம் சிறப்பாக அமைய வழி செய்ய வேண்டியது அவசியம்.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள்நேற்று வெளியான நிலையில்அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்இன்ஜினியரிங்மருத்துவம் படிப்புகளில் சேர்வர்அதே நேரம்குறைவான மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்குஎன்ன வாய்ப்புகள் உள்ளன என்பதைமாணவர்களும்பெற்றோரும் தெரிந்து கொள்வது அவசியம்.
35 
மதிப்பெண்ணே போதும்.
சென்னை பல்கலையின்தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரியும்ஹிந்துஸ்தான் கலைஅறிவியல் கல்லுாரி முதல்வருமான திருமகன் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வில்எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும்மாணவர்களும்பெற்றோரும் கவலையே பட வேண்டாம்அனைத்து கலைஅறிவியல் பட்டப் படிப்புகளுக்கும்பிளஸ் 2 தேர்ச்சி மட்டுமே போதும்.
உளவியல் ஆலோசகர் கதிரவன் 

அரசு மற்றும் உதவி பெறும் கல்லுாரிகளில், 'சீட்கிடைக்கா விட்டால்தனியார் கல்லுாரிகளில்நிச்சயம் இடம் கிடைக்கும்.எவ்வளவு மதிப்பெண் உள்ளதோஅதற்கேற்ற பட்டப்படிப்பில் சேரலாம்அந்த படிப்பின் வழியேஅரசு துறை வேலைவாய்ப்பு தேர்வுகள் எழுதிஅரசு அதிகாரி ஆகலாம்.மொழி சார்ந்த படிப்புகளுக்குஎல்லா மாணவர்களுக்கும்கல்லுாரிகளில் இடம் கிடைக்கும்

தமிழ்ஆங்கிலம் எனமொழியியல் முடித்தவர்களுக்குஅதிக வேலைவாய்ப்புகள் உள்ளனஇதற்குபிளஸ் 2 மதிப்பெண்ஒரு தடையாக இருக்காது.ஊடகங்கள்நாளிதழ் கள்விளம்பர துறைகளில்மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளனஅந்த பாடங்களையும் தேர்வு செய்யலாம்

பட்டப் படிப்புக்குகட்டணம் செலுத்த முடியாதவர்கள்எளிய முறையில்வங்கிகளில்கல்வி கடன் பெறலாம்.ஒரு மாணவருக்குஆண்டுக்கு, 2,000 ரூபாய் வரை தான் வட்டி வரும்படிப்பு முடித்துவேலைக்கு சென்ற பின்கடனைமாத தவணையாக செலுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்

40 - 45 போதுமே! 

அண்ணா பல்கலையின்இணைப்பில் உள்ளஇன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர்வதற்குபிளஸ் 2 தேர்வில்பொது பிரிவு மாணவர்கள், 45 சதவீதம் மதிப்பெண் பெற்றால் போதும்மற்ற பிரிவு மாணவர்கள், 40 சதவீதம் மட்டும் பெற்றாலே போதுமானது.அவர்கள்ஏதாவது ஒருஇன்ஜி., கல்லுாரியில்பி.., அல்லதுபி.டெக்., இன்ஜினியரிங் படிப்பில் சேரலாம்தமிழக அரசின்கவுன்சிலிங் வழியாக இட ஒதுக்கீடு அடிப்படையில்இந்த இடங் பெறலாம்கலைக்கு, 35 போதும். 
பிளஸ் 2வில்வெறும் தேர்ச்சி மதிப்பெண்ணான, 35 மதிப்பெண் மட்டும் எடுத்தால் கூடஏதாவதுஒரு பட்டப்படிப்பில்சேரலாம்ஒவ்வொரு படிப்புக்கும்அதற்கேற்ற வேலைவாய்ப்புகள் உள்ளனபி.., - பி.எஸ்சி., - பி.பி.., உள்ளிட்டஇளநிலை அறிவியல் மற்றும் கலை படிப்புகளில் சேர முடியும்.அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள்தனியார் கலை கல்லுாரிகளில்விண்ணப்ப
பதிவு துவங்கியுள்ளதுமதிப்பெண்ணை தர வரிசைப்படுத்திமாணவர்களுக்குபட்டப்படிப்பு சேர்க்கை வழங்கப்படுகிறதுபிளஸ் 2 தேர்ச்சி மட்டும் பெற்றவர்கள்ஏதாவதுஒரு பல்கலையில்,பட்டப்படிப்பு மட்டும் முடித்த பின்குரூப், 1, 2, 3 எனஅரசு பணிகளுக்கானடி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் எழுதிஅரசு பணியில் சேரலாம்

சட்டம்சி..,வுக்கு, 45 போதும் 

அதேபோல்அம்பேத்கர் சட்ட பல்கலையின்இணைப்பில் உள்ளசட்ட கல்லுாரிகளில்எல்.எல்.பி., - எல்.எல்.பி., ஹானர்ஸ்பி.., - பி.பி.., - எல்.எல்.பி., போன்ற படிப்புகளில் சேரலாம்இதற்குபொது பிரிவினர்பிளஸ் 2வில், 45 சதவீதமும்மற்ற பிரிவினர், 40 சதவீதமும் மதிப்பெண் பெற்றால் போதும்வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல் படித்தவர்கள்பிளஸ் 2 தேர்ச்சி மட்டும் பெற்றால் போதும்தொலைநிலையில்சி.., படிப்பும்கல்லுாரியில்பி.காம்., படிப்பும் படிக்கலாம்.

'டிப்ளமா'வுக்குதேர்ச்சி போதும் 

மூன்றாண்டு பட்டப்படிப்பு சேராதவர்கள்பிளஸ் 2 தேர்ச்சி மட்டும் பெற்றிருந்தால், 'டிப்ளமாஇன்ஜினியரிங் படிப்புகளில்நேரடியாகஇரண்டாம் ஆண்டில் சேரலாம்இரண்டு ஆண்டுகளில் படிப்பை முடித்துபி.., - பி.டெக்., போன்றஇன்ஜினியரிங் படிப்புகளில்நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கையில் சேரலாம்இதன்படிநேரடி இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர்ந்தவர்களுக்கு இணையான பட்டத்தையும்வேலைவாய்ப்பையும் பெறலாம்.
மருத்துவமும்துணை படிப்புகளும் 

மருத்துவ படிப்பில் சேர்வதற்குபிளஸ் 2வில் குறைந்தபட்சம்ஆங்கிலம்இயற்பியல்வேதியியல்உயிரியல் அல்லது விலங்கியல்தாவரவியல் அல்லது உயிரி தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில்பொது பிரிவினர், 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றால் போதும்.பொது பிரிவில் உள்ள மாற்று திறனாளி மாணவர்கள், 45 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும்மற்ற அனைவரும், 40 சதவீதம் பெற்றிருந்தால் போதும். 'நீட்நுழைவுத் தேர்வு அடிப்படையில்தரவரிசையில் இடம்பெற்றுமருத்துவ படிப்பில் சேரலாம்.'நீட்தேர்வு மதிப்பெண் குறைவு காரணமாகஎம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர முடியாவிட்டால்மருத்துவம் சார்ந்தபி.பார்ம்., கண் மருத்துவத்துக்கான, 'ஆப்தால்மாலஜிஉள்ளிட்ட பட்டப் படிப்புகளில் சேரலாம்மாணவியர், 'நர்சிங்படிப்புகளில் சேர்வதன் வழியேஅரசு மற்றும் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில்நல்ல சம்பளத்தில்பணி வாய்ப்பை பெற முடியும்.
தோல்வியே வெற்றியின் முதல் படி

சேலத்தை சேர்ந்தஉளவியல் ஆலோசகர்கதிரவன் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வில்அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும்வரும் தேர்வில் தேர்ச்சி பெற உள்ள மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.இந்த தேர்வில்அதிக மதிப்பெண் பெறாமல் அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்கள்வரும் துணை தேர்வில்சிறந்த மதிப்பெண் எடுக்க முடியும்

இப்போதைய சிறிய தோல்விஅடுத்த இமாலய வெற்றிக்கு படிக்கல்.விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன்பள்ளி படிப்பு கூட முடிக்காதவர்அவரது தாய் அளித்த ஊக்கத்தால்உலகம் போற்றும் விஞ்ஞானியானார்இன்னும் எத்தனையோஅரசியல் தலைவர்கள்அரசு அதிகாரிகள்பிளஸ் 2 தேர்வில்தேர்ச்சியே பெறாமல்இரண்டாவது முயற்சியில்பெரும் வெற்றி பெற்றுள்ளனர்வெறும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்லஅதேபோல்இன்ஜினியரிங்கும்மருத்துவமும் மட்டும்உயர்ந்த படிப்புகள் அல்லஆசிரியர்கள்பேராசிரியர்கள்கல்வி நிறுவன அதிபர்கள் போன்ற பலர்பிளஸ் 2வில்அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அல்ல.எல்லா படிப்புக்கும் வேலைவாய்ப்பும்அந்தஸ்தும் உள்ளதுஇந்த படிப்பில்மதிப்பெண் வரவில்லையாவேறு எந்த படிப்பிற்கான திறமைநம்மிடம் இருக்கிறது என தெரிந்து கொண்டால்அதிக மதிப்பெண் எடுத்தவர்களை விடவாழ்க்கையில்உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்

வாழ்க்கையில் இத்தனை வழிகள் இருப்பதைப் பற்றித் துளியும் சிந்திக்காமல்தற்கொலை செய்து கொள்வதுவாழ்க்கையே அஸ்தமித்து விட்டதாக நினைப்பதுமற்றவர்கள் கிண்டலடிப்பரே எனதாழ்வு மனம் கொள்வது ஆகியவைவாழ்வில் முன்னேறஎந்த வகையிலும் உதவாதுமாணவர்கள்நம்பிக்கையுடன்நல்லநேர்மறையான முடிவு வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்துணை தேர்வு எப்போது

பிளஸ் 2வில்தேர்ச்சி பெறாதவர்களுக்குஜூன் மாதம்துணை தேர்வு நடத்தப்பட உள்ளதுஅரசு தேர்வு துறை சார்பில்ஜூன், 6 முதல், 13ம் தேதி வரைஇந்த தேர்வு நடக்கும்அதற்கு விண்ணப்பிக்கும் தேதிவிரைவில் அறிவிக்கப்படும்இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில்மாணவர்கள்இப்போதிருந்தே பாடங்களை படித்துதயாராக வேண்டும்

ஜூனில் நடக்க உள்ள துணை தேர்வுக்குஇந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்எளிதில் தேர்ச்சி பெறலாம்தேர்ச்சி மட்டும் பெற்றால் போதும்ஏதாவது ஒருபடிப்பில்உங்களுக்கு நிச்சயம் வாய்ப்புள்ளது.பிளஸ் 2வில்மதிப்பெண் குறைந்தாலும்கல்லுாரி படிப்பில்உங்கள் கவனத்தை செலுத்தி,முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுங்கள்கல்லுாரியிலேயே, 'கேம்பஸ்வழியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்

'படி படிஎனஅழுத்தம் தராதீர்!

பிளஸ் 2 தேர்வில், 80 சதவீதத்துக்கு மேல்மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியரின்பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வில்எங்கள் பிள்ளைகள்அதிக மதிப்பெண் பெறுவதற்குஅவர்களின் தன்னம்பிக்கையும்கடின உழைப்பும் காரணம்இவ்வளவு மதிப்பெண் வாங்க வேண்டும் எனநாங்கள் வற்புறுத்தவில்லை

மாறாக, 'நேரத்தை வீணடிக்காமல்பாடங்களை புரிந்து படித்து விட வேண்டும்என அறிவுறுத்தினோம்.தினமும்பள்ளியில் நடத்தும் பாடங்களைவீட்டில் படித்துஅதே நாளில்தேர்வு எழுதிபார்த்து விட வேண்டும்அந்த பாடங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால்அதை குறிப்பெடுத்துமறுநாள் பள்ளிக்கு சென்றதும்பாட ஆசிரியர்களிடம் விளக்கம் பெற வேண்டும் எனவழிகாட்டினோம்

சரியான நேரத்தில் உணவுதுாக்கம் என்பதும்மாணவர்களுக்கு முக்கியமானதுஎனவேமதிப்பெண் குறைந்த மாணவர்கள்கவலைப்பட வேண்டாம்பிள்ளைகளுக்குஎந்த விதத்திலும்படிப்பின் காரணமாகவோமதிப்பெண் காரணமாகவோஅழுத்தம் தரவில்லைதரவும் கூடாதுஉரிய நேரத்தில்உணவுதுாக்கம்விளையாட்டு எனதிட்டமிட்டால் போதும்இதன்பிறகும்மதிப்பெண் குறைந்தால்அதற்கேற்ற படிப்பில் சேர்ந்து சாதிக்கலாம் எனநினைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்திறந்தநிலை பள்ளியும் இருக்கு

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாமலோமதிப்பெண் குறைவாகவோ உள்ளவர்கள்தொலைநிலை பள்ளியிலும் படிக்கலாம்மத்திய அரசின்தேசிய திறந்தநிலை பள்ளியானஎன்...எஸ்., நிறுவனத்தில் சேர்ந்துவீட்டில் இருந்தவாறே படிக்கலாம்.இதில்சி.பி.எஸ்.., பாட திட்டம் பின்பற்றப்படும்இதில் படிப்பவர்கள், 'நீட்தேர்வில் கூட பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறதுஎன்...எஸ்., பள்ளி படிப்பில் சேர்பவர்கள்
,www.nios.ac.in

என்ற இணையதளத்தில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் கூடஎன்...எஸ்., கல்வி முறையில்பிளஸ் 2 வகுப்பில் சேரலாம்.நேரடி பள்ளியில் படித்ததற்கு நிகரான சான்றிதழ்மத்திய அரசால் வழங்கப்படும்இந்த சான்றிதழை பயன்படுத்திகல்லுாரிகளில் நேரடியாகபட்டப் படிப்புகளில் சேரலாம்.இதன்தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மண்டல அலுவலகம்சென்னைராணிமேரி கல்லுாரி அருகில்லேடி வெலிங்டன் பள்ளி வளாகத்தில் உள்ளதுஅங்கு சென்று விபரங்களை தெரிந்து கொள்ளலாம்

கைகொடுக்கும் தொலைநிலை பல்கலை

பிளஸ் 2 தேர்ச்சி பெறா விட்டால்கல்லுாரியில் சேர முடியாதே என நினைப்பவர்களுக்குஅடைக்கலம் தரும் வகையில்மத்திய அரசின்இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலையும்தமிழக அரசின்திறந்த நிலை பல்கலையும் உள்ளன.இங்குபிளஸ் 2 முடிக்காதவர் களுக்குஆறு மாதம் தகுதி தேர்வு பயிற்சியும்தேர்வும் நடத்தப்படும்இதில்மாணவர்கள் எளிதாக தேர்வாகலாம்.அதன்பின்மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பைஅதே பல்கலையில் தொலைநிலையில் படிக்கலாம்இந்த படிப்புக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள்அரசு வேலைக்கும்போட்டி தேர்வுக்கும் தகுதியானதாகும்இதற்கான விபரங்களை,
rcchennai.ignou .ac.in
மற்றும்
www.tnou.ac.in
என்ற இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்