Advertisement

நோய்களிலிருந்து நீங்கள் முற்றிலும் விடுபட, ஒரு பிரபல மருத்துவரின் அறிவுரைகள் உங்களுக்காக!

ஆரோக்கியம்
உடலில் பிரச்சனைகள் வராமல் இருக்காது. வந்த பிரச்சனைகளை நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள் என்று முக்கியம். மருத்துவரிடம் சென்றாலும் மாத்திரைகள் சாப்பிட்டாலும் சில நோய்கள், தொற்று நோய்கள் போகாமல் உடலிலேயே இருந்து படுத்தி எடுக்கும்.

நீங்கள் கவனித்திருப்பீர்கள். உடலில் எந்த குறையும் இல்லை என்று எல்லா ரிப்போர்ட் கூறும். ஆனால் உடல்,குறிப்பிட்ட பிரச்சனையால் பாதிக்கப்படும். தொடர்ந்து வறட்டு இருமல், மார்பு சளி, வயிற்று வலி , காய்ச்சல் என காரணம் தெரியாமல் பிரச்சனைகள் வந்து உடல் நலம் பாதிக்கும்.

இந்த நோய்களை கையாள்வதற்கு பிரபல மருத்துவர் சில அறிவுரைகளை கூறுகின்றார்.கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்

சூரிய சக்தியும் காந்த சக்தியும் :
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக சூரியனை 10 நொடிகள் பாருங்கள். எந்த காரணத்திலும் மறக்காதீர்கள். அவ்வாறு சூரியனை பார்க்கும் போது தரையில் நின்று வெறும் காலுடன் பார்க்க வேண்டும்.

அதற்காக பத்து மணிக்கு எழுந்து சூரியனை பார்க்கக் கூடாது. அது பாதிப்பினை அதிகப்படுத்தும். அதிகாலை சூரியனை பார்ப்பது மட்டுமே சிறந்தது. உங்கள் உடலில் நல்ல அதிர்வினை தரும்.

தரையில் நிற்கும் போது, காந்த சக்தியும் சூரிய சக்தியும் சேர்ந்து உங்கள் உடலில் ஏற்படும் பாதிப்பினை சரி செய்யும். இவ்வாறு நாள் தவறாமல் தினமும் சூரியனை பார்ப்பதை வழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்.

ஃப்ளூரைட் இல்லாத நீர் :
ஃப்ளூரைட் இல்லாத நீரினை குடிக்க பழகிக் கொள்ளுங்கள். மினரல் நீரினை குடிக்கும் வழக்கத்தை விட்டுவிட்டு, சாதாரண ஆற்று நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் குடியுங்கள்.

இன்னொரு மிக நல்ல வழி, நீரினை காலை சூரிய ஒளியில் சில மணி நேரங்கள் வைத்து, பின் எடுத்து அதனை குடிக்கலாம். அது உங்கள் பிரச்சனைகளை சரி செய்யும். ஆனால் இரவில் நீரினை வெளியில் வைத்து அதனை குடிக்கக் கூடாது.

நச்சுக்களை வெளியேற்ற :
உங்கள் நச்சுக்களை வெளியேற்ற மிக மிக எளிதான வழி காலையில் ஃப்ரஷான காற்றை சுவாசிப்பதுதான். ஒரு 10 நிமிடங்கள் ஃப்ரஷான காற்றை சுவாசியுங்கள்.முடிந்த வரை ஒரு சின்ன வாக்கிங் அல்லது தியானம் இருந்தால் கூட போதும். ஒரு நாளில் வித்யாசத்தை காண்பீர்கள். அன்று நாள் முழுவதும் உங்களையும் அறியாமல் சுறுசுறுப்பாக புத்துணர்வுடன் இருப்பீர்கள்.

தூங்கும் நேரம் :
இரவு 10 மணியிலிருந்து, 2 மணி வரை உங்களின் உடல் உறுப்புக்கள் தங்கள் பாகங்களை சரி செய்து கொள்ளும் நேரம். அந்த சமயத்தில் நோய்களை குணப்படுத்தும் ஹார்மோன்கள் சுரக்கும்.

ஆனால் அந்த நேரங்களில் உடல் உழைக்கும்போது, அது தன் வேலையை செய்யாது. இதனால் உடல் நலம் மேலும் மேலும் பாதிக்கும். ஆகவே எது இருந்தாலும் 10 மணிக்கு தூங்க செல்லும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.

பாக்கெட் உணவுகளுக்கு தடா :
எந்த காரணத்திற்கு கொண்டும், பாக்கெட் உணவுகளை சாப்பிடாதீர்கள். அவைகளில் உள்ள கெமிக்கல் உங்கள் உடல் நலத்தை மேலும் பாதிக்கச் செய்யும். மது, காபி, குளிர்பானங்கள் ஆகியவை உடலுக்கு கேடுகளையே அதிகம் தரும். எனவே இவற்றை பார்க்க கூட செய்யாதீர்கள்.

பசுமையான இடங்களுக்கு செல்லுங்கள் :
உடல் நலம் சரியில்லாத போது, பச்சை பசேலென்று இடத்திற்கு செல்லுங்கள். அவை உங்கள் உடலில் நல்ல மாற்றத்தை கொண்டு வரும். சூரியன் மற்றும் செடிகொடிகளுக்கு நோயை குணமாக்கும் சக்தி உள்ளது. முக்கியமாய் மன அழுத்தம் உள்ளவர்கள் தோட்டம், பூக்கள் நிறைந்த இடங்களுக்கு சென்றால், புத்துணர்ச்சியுடன்தான் திரும்பி வருவீர்கள்.

எதிர்மறை எண்ணங்கள் :
உங்கள் உடல் நலம் சரியில்லையென்றாலும், பாஸிடிவான எண்ணங்களுடனே இருங்கள். ஏனெனில் உங்கள் ஆழ் மனது உங்கள் எண்ணங்களையே பின்பற்றும். பாஸிடிவான எண்ணங்கள் உங்கள் நோய்களை குணப்படுத்தும்.

காய்கறிகள் :
அன்றாடம் கலர் கலரான காய்கறிகளையும் பழங்களையும் உண்ணுங்கள். இவை உடலுக்கு புது ரத்தத்தையும், பலத்தையும் தரும். நோய்களைக் கண்டு அஞ்சாதீர்கள். அவைகளை முழு தைரியத்துடன் எதிர்கொள்ளுங்கள். மேலே சொன்னவற்றை தொடர்ந்து கடைபிடியுங்கள். நோய்களை விரட்டுங்கள்.